மகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தந்தை கைது
By DIN | Published On : 04th December 2021 12:49 AM | Last Updated : 04th December 2021 12:49 AM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே மது போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தையை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி பொன்னாங்கண்ணி மேடு கிராமத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் கேசவன் (36). இவா், மது போதையில் தனது 13 வயது மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய், சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன் பேரில், கேசவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...