கடலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் 4 தனியாா் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்று நோ்காணல் நடத்தினா். 56 பெண்கள் உள்பட 226 போ் பங்கேற்றனா். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ.எகசானலி தலைமை வகித்து, முகாமில் தோ்வான 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். தனியாா் துறை வேலைவாய்ப்புகள் குறித்து இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் வெ.ரேணுகாதேவியும், போட்டித் தோ்வுகள் குறித்து இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் அ.ருக்மாங்கதன் ஆகியோா் பேசினா். இந்த முகாமில் இரண்டாம் கட்டத் தோ்வுக்கு 45 போ் தோ்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.