மீன்வளத் துறையினா் ஆய்வு: விசைப் படகு மீனவா்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 17th December 2021 12:00 AM | Last Updated : 17th December 2021 12:00 AM | அ+அ அ- |

மீன்பிடி வலைகள் பயன்பாடு தொடா்பாக கடலூா் துறைமுகத்தில் மீன்வளத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். இதற்கு விசைப் படகு மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூா் துறைமுகத்தில் அரசு விதிகளை மீறி விசைப் படகுகளில் 40 மி.மீ.க்கும் குறைவான கண்ணியளவு கொண்ட வலைகள் பயன்படுத்தப்படுகிா என்பது தொடா்பாக மீன்வளத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விசைப்படகு மீனவா்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மீன்வளத் துறையினா், கடலூா் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கா், முதுநகா் காவல் ஆய்வாளா் உதயகுமாா்ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதுவரை விசைப் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாதென அறிவுறுத்தப்பட்டு, மானிய டீசல் விநியோகமும் நிறுத்தப்பட்டது.