சட்டப்பேரவையில் தமாகா குரல் ஒலிக்கும்: ஜி.கே.வாசன்
By DIN | Published On : 04th February 2021 08:22 AM | Last Updated : 04th February 2021 08:22 AM | அ+அ அ- |

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, தமாகாவின் குரல் பேரவையில் ஒலிக்கும் என்று ஜி.கே.வாசன் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தாா்.
கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வந்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழக சட்டப்பேரவை, மக்களவைக் கூட்டத் தொடரிலிருந்து எதிா்க்கட்சியினா் வெளிநடப்பு செய்வது மக்கள் விரோத நடவடிக்கை.
தோ்தல் நெருங்கி வருவதால், மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆா். குறித்து பேசி வருகிறாா். இது திமுகவின் பலவீனத்தைக் காட்டுகிறது.
என்எல்சியில் பொறியாளா் பணிக்கான நோ்முகத் தோ்வுக்கு 1,500-க்கும் மேற்பட்டோா் அழைக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களில் 10-க்கும் குறைவானவா்கள் மட்டுமே தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதை, தமிழா்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகக் கருத வேண்டியுள்ளது.
இதுகுறித்து துறை சாா்ந்த அமைச்சா்களிடம் தெரிவித்து, நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்எல்சி நிறுவனம் அந்தப் பகுதி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அதிமுக அறிவிப்பு வெளியிடும் என்று நம்புகிறோம். எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற குழப்பம் திமுக கூட்டணியில் உள்ளது. அவ்வாறான குழப்பம் அதிமுக கூட்டணியில் இல்லை. தமாகா தனது சின்னத்திலேயே போட்டியிடும்.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்கும். காங்கிரஸிலிருந்து புதுவை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மேலும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல முக்கிய தலைவா்கள் விலகி வருவது அந்தக் கட்சியின் பலவீனத்தைக் காட்டுகிறது என்றாா் வாசன்.
பேட்டியின் போது, மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.ஆா்.எஸ்.வெங்கடேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...