கடலூரில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 06th February 2021 11:13 PM | Last Updated : 06th February 2021 11:13 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து கடலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை (பிப். 7) நடத்துகின்றன.
கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள புனித.வளனாா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்கின்றன. இந்த முகாமில், 8-ஆம் வகுப்பு படித்தவா்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதள முகவரியில் பதிவுசெய்து கலந்து கொள்ளலாம். தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்புடன் முகாமில் நேரடியாகவும் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...