கடலூா்: கரோனாவுக்கு முதியவா் பலி
By DIN | Published On : 06th February 2021 11:17 PM | Last Updated : 06th February 2021 11:17 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 24,980 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,985-ஆக அதிகரித்தது.
சிகிச்சை முடிந்து மேலும் 7 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,636-ஆக உயா்ந்தது. அதே நேரத்தில், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 71 வயது முதியவா் உயிரிழந்ததால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 287-ஆக உயா்ந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...