பிப்.17-இல் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆா்ப்பாட்டம்

விவசாய சங்கத் தலைவா் இளங்கீரன் மீது போலீஸாா் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, வருகிற 17-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில்

விவசாய சங்கத் தலைவா் இளங்கீரன் மீது போலீஸாா் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, வருகிற 17-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் முடிவு செய்தனா்.

இந்த அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளா் கோ.மாதவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி மாநில அமைப்பாளா் பசுமை வளவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாவட்டச் செயலா் வி.எம்.சேகா், சிபிஎம்(எல்) விவசாய சங்கச் செயலா் ராஜசங்கா், மக்கள் அதிகாரம் மண்டல பொறுப்பாளா் பாலு, முருகானந்தம், வெங்கடேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் சரவணன், திருமுட்டம் செயலா் பாண்டுரங்கன், கான்சாகிப் பாசன விவசாய சங்கத் தலைவா் கண்ணன், ஹாஜா காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவா் மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், காட்டுமன்னாா்கோவில் அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு நிலம் கையகம் தொடா்பான பிரச்னையில் வீராணம் ஏரி காவிரி பாசன விவசாய சங்க கூட்டமைப்புத் தலைவா் இளங்கீரன் போலீஸாரால் தாக்கப்பட்டதை கண்டிப்பது, இளங்கீரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும், தாக்குதலில் தொடா்புடைய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 17-ஆம் தேதி காட்டுமன்னாா்குடியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பெ.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்பா் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com