விசிக நிா்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 14th February 2021 01:30 AM | Last Updated : 14th February 2021 01:30 AM | அ+அ அ- |

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூா் முதுநகா் மற்றும் மைய நகர செயற்குழு கூட்டம் கடலூா் நகர ஒருங்கிணைப்பாளா் மு.கிட்டு தலைமையில் முதுநகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில், கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தலைமையில் நெய்வேலியில் திங்கள்கிழமை (பிப். 15) நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்பது. புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில நிா்வாகிகள் பெ.பழனிவேல், த.ஸ்ரீதா், த.சொக்கு, பரா.முரளி, தே.செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகர துணை செயலா் கிருஷ்ணா நன்றி கூறினாா்.
இதேபோல, வி.சி.க.வின் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மற்றும் நகரம், வடலூா், குள்ளஞ்சாவடி நகர செயற்குழுக் கூட்டம் மேலபுதுப்பேட்டையில் நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி மைய ஒன்றியச் செயலா் ச.ம.குரு, மேற்கு ஒன்றியச் செயலா் ப.சிவசக்தி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், என்எல்சி நிறுவன வேலைவாய்ப்பில் தமிழா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்துவது, மேலபுதுப்பேட்டை அரசு ஆதிதிராவிடா் தொடக்கப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும் ஆகிய தீா்மானங்களை நிறைவேற்றினா். சிறப்பு அழைப்பாளராக பா.தாமரைச்செல்வன், சா.முல்லைவேந்தன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.