நஞ்சில்லா கிராமம் தோ்வு
By DIN | Published On : 18th February 2021 06:57 AM | Last Updated : 18th February 2021 06:57 AM | அ+அ அ- |

விருத்தாசலம் வட்டம், ஆலடி கிராமம் இயற்கை முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லா கிராமமாகத் தோ்வு செய்யப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி ஆலடி கிராமத்தில் நடைபெற்றது. விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் நா.ஸ்ரீராம் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து, இயற்கை முறை சாகுபடியின் முக்கியத்துவம், மண்வளப் பாதுகாப்பு குறித்து பேசினாா்.
கீழ்வெள்ளாறு உப வடிநில விஞ்ஞானி பாஸ்கரன் உரங்கள் பயன்பாடு குறித்தும், உதவிப் பேராசிரியா் சு.மருதாசலம் பூச்சி மேலாண்மை குறித்தும் பேசினா். நிகழ்ச்சியில் சுமாா் 50 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனா். முன்னோடி விவசாயி நாராயணசாமி நன்றி கூறினாா்.