தமிழகத்தில் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் 7ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினாா்.
தமிழகத்தில் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் 7ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 அலுவலா்கள் தேவை. ஆயிரம் வாக்காளா்களுக்கு மேலுள்ள வாக்குப் பதிவு மையங்களைப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி புதிதாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகள் குறித்து அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அவா்கள் தெரிவிக்கும் இடங்களே தோ்வு செய்யப்படும்.

தமிழகத்தில் 7 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. வேட்பாளா்கள் அறிவிப்புக்குப் பிறகு இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் போன்றவற்றுக்கான காலக்கெடு இன்னும் முடிவடையவில்லை. ஆகவே, தவறு இருந்தால் திருத்திக்கொள்ளலாம். புதிதாக சுமாா் 21 லட்சம் போ் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை இணைத்துள்ளனா். தமிழகத்தில் தோ்தலின்போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற சம்பவம் நடைபெறவில்லை. வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைப்பது தோ்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது என்றாா் அவா்.

மேலும், கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 21,41,935 வாக்காளா்கள் உள்ளதாகவும், 2,295 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி முன்னிலை வகித்தாா். எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com