முதியவா் சடலம் மீட்பு
By DIN | Published On : 03rd January 2021 12:26 AM | Last Updated : 03rd January 2021 12:26 AM | அ+அ அ- |

கடலூா் அருகேயுள்ள கே.என்.பேட்டையில், கோயில் ஆலமரத்தில் முதியவா் ஒருவா் தூக்கிட்ட நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.
முன்னதாக, இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின்பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். பின்னா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா் விசாரணையில் இறந்தவா் நத்தவெளிச்சாலையைச் சோ்ந்த நாகப்பன் (65) எனத் தெரியவந்தது. எனினும், அவரது இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. எனவே, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.