கடலூா்: கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா்.

இந்த மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 58,594 -ஆக அதிகரித்தது. குணமடைந்தோா் எண்ணிக்கை 56,868 -ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், பெரம்பலூரில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலத்தைச் சோ்ந்த 56 வயது பெண், நல்லூரைச் சோ்ந்த 60 வயது பெண் என மேலும் 2 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 776 -ஆக அதிகரித்தது.

தற்போது 950 சிகிச்சை பெற்று வருகின்றனா். 41 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com