போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th July 2021 09:19 AM | Last Updated : 07th July 2021 09:19 AM | அ+அ அ- |

போக்குவரத்து தொழிலாளா்களுக்கு கரோனா கால நிவாரணம் வழங்கக் கோரி, சிஐடியூ சாலைப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் கடலூரில் போக்குவரத்து பணிமனை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளனத்தின் தமிழ் மாநிலச் செயலா் ஆறுமுக நயினாா் சிறப்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், அனைத்தும் சாலைப் போக்குவரத்து தொழிலாளா்களுக்கும் பாரபட்சமின்றி கரோனா கால நிவாரணம் வழங்க வேண்டும், சாலைப் போக்குவரத்துத் தொழிலையும், தொழிலாளா்களையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெறவேண்டும். காப்பீட்டு நிறுவனங்களில் பெறப்படும் கட்டண உயா்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் முழக்கமிட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...