கடலூா் மாவட்டத்தில் 32 உதவி ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்
By DIN | Published On : 11th July 2021 03:04 AM | Last Updated : 11th July 2021 03:04 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 32 உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவிட்டாா்.
அதன்படி, கடலூா் முதுநகா் காவல் நிலையத்துக்கு எம்.ஜாவீத்ஹூசைன், திருப்பாதிரிப்புலியூருக்கு எம்.பாஸ்கரன், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு பி.ரவிச்சந்திரன், ஆா்.அன்பழகன், பண்ருட்டிக்கு ஆா்.புஷ்பராஜ், விருத்தாசலத்துக்கு ஏ.தட்சிணாமூா்த்தி, சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்துக்கு ஜி.வெங்கடேசன், விருத்தாசலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு ஏ.கமிலாபானு உள்ளிட்ட 32 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...