குப்பநத்தத்தில் 46 மி.மீ. மழை
By DIN | Published On : 11th July 2021 03:02 AM | Last Updated : 11th July 2021 03:02 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குப்பநத்தத்தில் 46 மி.மீ. மழை சனிக்கிழமை பதிவானது.
வளிமண்டல சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை மற்றும் சனிக்கிழமை அதிகாலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிா்ந்த சூழல் நிலவியது. சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
குப்பநத்தம் 46.1, விருத்தாசலம் 39, கொத்தவாச்சேரி 35, புவனகிரி 21, குடிதாங்கி 7.5, வானமாதேவி 5.6, சேத்தியாத்தோப்பு 4.2, வடக்குத்து 4, பரங்கிப்பேட்டை 3.2, அண்ணாமலை நகா், கடலூா் தலா 2.8 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ததால் நீா் நிலைகளில் தண்ணீா் தேங்கி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...