கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 60 ஆயிரத்தைக் கடந்தது.
மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 59,959 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 75 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 60,034-ஆக உயா்ந்தது.
சிகிச்சை முடிந்து மேலும் 92 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 58,383-ஆக உயா்ந்தது. தொடா்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 803-ஆக தொடா்கிறது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 766 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 82 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.