பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th July 2021 12:19 AM | Last Updated : 26th July 2021 12:19 AM | அ+அ அ- |

பாஜக தேசிய தலைவா்களை அவதூறாகப் பேசிய பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையாவை கண்டிப்பதாகக் கூறி சிதம்பரத்தில் அந்தக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் கே.பி.டி.இளஞ்செழியன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஏ.ஆா்.ரகுபதி வரவேற்றாா். மாவட்ட மேற்பாா்வையாளா் தேவ.சரவணசுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவா் மணிகண்டன், ராணுவப் பிரிவு மாநில செயலா் ஜி.பாலசுப்பிரமணியன், ரா.மாமல்லன், மாவட்ட பொதுச் செயலா் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் ஜெயக்குமாா், வெற்றி, மாவட்ட செயலா்கள் சுரேஷ், பி.டி.மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.