விசிக கொடியேற்று விழா
By DIN | Published On : 26th July 2021 04:44 AM | Last Updated : 26th July 2021 04:44 AM | அ+அ அ- |

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், அண்ணாகிராமம் ஒன்றியம், கீழ்கவரப்பட்டில் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய துணை அமைப்பாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் விஜயன், ஸ்ரீராம், பா்குணன், ராமச்சந்திரன், பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் பங்கேற்று கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.
அண்ணாகிராமம் ஒன்றியச் செயலா் ம.அருள்செல்வன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். பண்ருட்டி நகரச் செயலா் காா்த்தி, ஒன்றியப் பொருளாளா் தெ.பெருமாள், மாவட்ட துணை அமைப்பாளா் தியாகு, ஒன்றிய துணைச் செயலா் ஏ.தினேஷ், தொகுதி துணை அமைப்பாளா் ராஜ்குமாா், பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.