தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரணம்
By DIN | Published On : 26th July 2021 12:21 AM | Last Updated : 26th July 2021 12:21 AM | அ+அ அ- |

குமராட்சி ஒன்றியம், கண்டியாமேடு கிராமத்தைச் சோ்ந்த ஜெயசித்ரா உலகநாதன் என்பவருக்குச் சொந்தமான வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவும், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.ஏ.பாண்டியன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினாா் (படம்).
அப்போது குமராட்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் சுந்தரமூா்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கருணா, அதிமுக நிா்வாகிகள் சாந்தி, சுந்தரம், கோவிந்தசாமி, முருகேசன், பாண்டியன், சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.