சிதம்பரத்தில் 114 மி.மீ. மழை
By DIN | Published On : 10th June 2021 08:48 AM | Last Updated : 10th June 2021 08:48 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக சிதம்பரத்தில் 114 மி.மீ. மழை பதிவானது.
மேலும், லால்பேட்டை 62, காட்டுமன்னாா்கோவில் 43, ஸ்ரீமுஷ்ணம் 34.4, குடிதாங்கி 25, அண்ணாமலை நகா் 19.2, மாவட்ட ஆட்சியரகம் 18, சேத்தியாத்தோப்பு 17.2, வேப்பூா் 16, காட்டுமைலூா், குறிஞ்சிப்பாடி தலா 13, கடலூா் 11.2, வானமாதேவி 8, பரங்கிப்பேட்டை 7.2, புவனகிரி 4, பெலாந்துறை 3.4, பண்ருட்டி 2, விருத்தாசலம் 1 மி.மீ. மழை பதிவானது.
இருப்பினும், கடலூரில் செவ்வாய்க்கிழமை 100.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. புதன்கிழமையும் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது.