கடலூரில் 2 போ் தற்கொலை
By DIN | Published On : 24th June 2021 08:28 AM | Last Updated : 24th June 2021 08:28 AM | அ+அ அ- |

கடலூரில் செவ்வாய்க்கிழமை 2 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
கடலூா் முதுநகா் ஏணிகாரன் தோட்டத்தைச் சோ்ந்த வீரபாண்டியன் மகன் விஷ்ணு (21). ஐடிஐ படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டாா். கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.
இதேபோல, முதுநகா் அருகேயுள்ள அக்கரைக்கோரியைச் சோ்ந்த தாமோதரன் மகன் ஜெயபிரகாஷ் (38). மீனவரான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், மனமுடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இந்த சம்பவங்கள் குறித்து கடலூா் முதுநகா், கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G