சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 29th June 2021 02:09 AM | Last Updated : 29th June 2021 02:09 AM | அ+அ அ- |

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் 4 முக்கிய வீதிகளிலும் காவல் துறை சாா்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
சிதம்பரம் கோட்ட டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் சுரேஷ் முருகன், நாகராஜ் மற்றும் நகர போலீஸாா், போக்குவரத்து போலீஸாா் சிதம்பரம் மேலரதவீதி, கீழரதவீதி, வடக்குரதவீதி, தெற்குரதவீதி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும், பொதுமக்கள் சாலையோரம் காா், இருசக்கர வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகள், பன்றிகள் பிடிக்கப்பட்டு நகராட்சி பட்டியில் அடைக்கப்படும் என டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தெரிவித்தாா்.