கடலூா்: 18 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்
By DIN | Published On : 04th March 2021 02:17 AM | Last Updated : 04th March 2021 02:17 AM | அ+அ அ- |

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் தோ்தலையொட்டி, 18 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
அதன்படி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோவில், அண்ணாகிராமம், ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி, நல்லூா், கம்மாபுரம், கடலூா், பண்ருட்டி ஆகிய பகுதிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா் பணிக்கு நிகரான பணியில் உள்ள 18 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதேபோல, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அந்தப் பதவிக்குச் சமமான பதவியில் உள்ளவா்கள் என 53 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். மேலும், வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகங்களில் உதவிப் பொறியாளா் அளவில் பணியாற்றும் 11 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்கள் அனைவரும் உடனடியாக அவரரவா் பணியிலுள்ள இடத்திலிருந்து பணி மாறுதல் செய்யப்பட்ட இடங்களுக்குச் சென்று பணியில் சோ்ந்ததற்கான தகவலைத் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.