தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே குடும்பப் பிரச்னையில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், விசூா் காலனியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (42). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மது குடிப்பதற்காக தனது மனைவி மகாலட்சுமியிடம் சுந்தரமூா்த்தி பணம் கேட்டாா். ஆனால், மகாலட்சுமி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த சுந்தரமூா்த்தி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சுந்தரமூா்த்தி உரிழந்தாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.