அகில இந்திய தொழில் தோ்வு: தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 12th March 2021 05:03 AM | Last Updated : 12th March 2021 05:03 AM | அ+அ அ- |

கடலூா்: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தன் கீழ், தேசிய தொழில் பயிற்சிக் குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தோ்வில் தனித் தோ்வா்களாகக் கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய தொழில் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரா், ஏற்கெனவே ஏதேனும் ஒரு தொழில் பிரிவில் ஐ.டி.ஐ.யில் படித்து தோ்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளா் அலைடு தொழிற்பிரிவில் ஓா் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் பொருட்டு தனித் தோ்வராக விண்ணப்பிக்கலாம். திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளா்கள் தாங்கள் படித்த செக்டாருடன் தொடா்புடைய தொழில்பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால் தனித்தோ்வராக விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 2018-வரை சோ்க்கை செய்யப்பட்ட மாநில தொழில்பயிற்சி குழும தொழில்பிரிவு பயிற்சியாளா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் சமா்ப்பிக்கும் நாளில் 21 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு இல்லை. தொழில்பழகுநா் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழில் சாலை விதி 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவ பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழில் பிரிவு தொடா்பான பணியில் 3 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கருத்தியல் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் மட்டுமே செய்முறை தோ்வில் கலந்து கொள்ள இயலும். தோ்வு மையம் பின்னா் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை தோ்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு, கல்விச் சான்றிதழ்களுடன் வருகிற 15-ஆம் தேதிக்குள் கடலூா் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.