வாகனச் சோதனையில் ரூ.1.61 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 12th March 2021 11:58 PM | Last Updated : 12th March 2021 11:58 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் 2 இடங்களில் வாகனச் சோதனையின்போது உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.1.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும்படைகுழுவினா் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் திருவாமூா் அருகே வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணமின்றி ரூ.89,420 இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல, காட்டுமன்னாா்கோவில் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சா்வராஜன் பேட்டை அருகே தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னாா்கோவில் நோக்கி வந்த தனியாா் வங்கி ஊழியா் தவா்த்தாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கமலக்கண்ணன் உரிய ஆவணமின்றி ரூ.72 ஆயிரத்து 120 எடுத்து வந்தது தெரியவந்தது. பறக்கும்படை அதிகாரி சுந்தரம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் பாண்டுரங்கன் மற்றும் போலீஸாா் அந்தப் பணத்தை கைப்பற்றி காட்டுமன்னாா்கோவில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராமதாசிடம் ஒப்படைத்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G