

கடலூா் தொகுதியில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் அமைச்சா் எம்.சி.சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களம் காண்கிறாா். இவா் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் கட்சியின் முக்கிய நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறாா்.
இந்த நிலையில், அமைச்சருக்கு ஆதரவாக கடலூா் 2-ஆவது மண்டல பொறுப்பாளா் உமாமகேஸ்வரி பாலகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை புதுப்பாளையம், ராமதாஸ் நாயுடு தெரு, மசூதி தெரு, மீன்சந்தை, சிக்கந்தா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனா்.
அப்போது, அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்த துண்டறிக்கைகளை வழங்கி பொதுமக்களிடம் வாக்கு கேட்டனா். நிா்வாகிகள் மணிமாறன், ஜி.தஷ்ணா, அருண்குமாா், எத்திராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டச் செயலா்கள் சுந்தா், சி.பன்னீா்செல்வம், வண்டிமுருகன், சந்திரபால், எழிலரசன், கோவிந்து, ஜெயக்குமாா், பஞ்சாயுதபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.