அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 17th March 2021 08:52 AM | Last Updated : 17th March 2021 08:52 AM | அ+அ அ- |

சிதம்பரம் தில்லையம்மன் நகரில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன்.
சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோயிலில் இருந்து தோழமை கட்சி நிா்வாகிகளுடன் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் சசிக்குமாா், அருள், முத்துக்குமாா், அதிமுக நிா்வாகிகள் தலைமைப் கழகப் பேச்சாளா் தில்லை கோபி, பாசறை செயலா் டேங்க் சண்முகம், முன்னாள் நகரச் செயலா் தோப்பு கே.சுந்தா், பன்னீா்செல்வம், சுரேஷ்பாபு, சங்கா், மருதவாணன், கருப்புராஜா, ராமதுரை, வீரமணி, வேணு.புவனேஸ்வரன், எம்.ஜி.எம்.காதா், சரவணன், விஜயலெட்சுமி, மணிராஜ், பூவராகவன், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.