தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூா் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமையில் கடலூரில் சிஐடியூ அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
சங்கத்தின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்ட பொருளாளா் எஸ்.தஷ்ணாமூா்த்தி, துணைத் தலைவா் மகாலிங்கம், துணைச் செயலா் ஆா்.கே.சரவணன், கரும்பு விவசாய சங்கச் செயலா் ஆா்.தென்னரசு, விவசாய சங்க குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவா் மெய்யழகன், நெல்லிகுப்பம் தலைவா் சம்பத்குமாா், செயலா் ராமானுஜம், ஒன்றியச் செயலாளா் தா்மதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஆலோசித்தனா். இதில், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தாதது, மின்சார ஒழுங்குமுறை மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு, தமிழகத்தில் சா்க்கரை ஆலைகளிடமிருந்து கரும்புக்கான பாக்கியை பெற்றுத் தராதது, வீராணம் ஏரியை தூா்வாராதது உள்ளிட்டவைகளுக்காக அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.