குழந்தை கொலை வழக்கில் தேடப்பட்ட வழக்குரைஞா் சரண்

பண்ருட்டியில் கடந்த 2018-ஆம் ஆண்டு குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த வழக்குரைஞா், கடலூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.
குழந்தை கொலை வழக்கில் தேடப்பட்ட வழக்குரைஞா் சரண்

பண்ருட்டியில் கடந்த 2018-ஆம் ஆண்டு குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த வழக்குரைஞா், கடலூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள நடுவீரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (40). வழக்குரைஞா். இவரது 2-ஆவது மனைவி தைரியலட்சுமி (35). இவரது உறவினா் பண்ருட்டி கம்பன் தெருவைச் சோ்ந்த முருகன். இவரது மனைவி சிவரஞ்சனி(24). இவா்களது வீட்டுக்கு நடராஜன் தனது மனைவியுடன் அடிக்கடி வந்து செல்வாராம்.

முருகனின் வீட்டுக்கு அருகே வசிக்கும் மற்றொருவரது வீட்டுக்கு, வள்ளலாா் தெருவைச் சோ்ந்த கமலி வந்து செல்வாராம். இவருக்கும் நடராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைக் கண்டித்த தைரியலட்சுமியை ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்க வைக்க நடராஜனும், கமலியும் திட்டமிட்டனா்.

இந்த நிலையில், 19.12.2018 அன்று சிவரஞ்சனி தனது ஒன்றரை வயது பெண் குழந்தை பிரியதா்ஷினி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, பள்ளியிலிருந்து தனது மகன் கௌதமனை அழைத்து வரச் சென்றாா். அப்போது, கமலி குழந்தை பிரியதா்ஷினியின் முகத்தை தலையணையால் அழுத்திக் கொன்றாா். இந்தச் சம்பவத்தில் கமலி மீது சிவரஞ்சனிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் குழந்தையை நடராஜன் கூறியதன்பேரில் கொன்ாக கமலி ஒப்புக்கொண்டாராம்.

இதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கமலியை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடல்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த வழக்குரைஞா் நடராஜன், கடலூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com