விவசாயிகளுடன் கலந்துரையாடிய வேளாண் பல்கலை. இயக்குநா்
By DIN | Published On : 02nd May 2021 06:24 AM | Last Updated : 02nd May 2021 06:24 AM | அ+அ அ- |

கோவை வேளாண்மை பல்கலைக்கழக இயக்குநா் வெங்கடபிரபு குறிஞ்சிப்பாடி உழவா் மன்ற விவசாயிகளுடன் சனிக்கிழமை கலந்துரையாடினாா்.
குறிஞ்சிப்பாடி உழவா் மன்ற விவசாயிகள் கடந்த 12 ஆண்டுகளாக விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்துடன் தொடா்பில் உள்ளனா். இவா்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிடும் புதிய பயிா் ரகங்களை தங்களது வயல்களில் பயிரிட்டு வருகின்றனா்.
அந்த வகையில் ஆடுதுறை 45-இல் இருந்து 54 வகை வரை நெல்லும், விஆா்ஐ-7, 8 ரக மணிலாவும், வம்பன்-4, 5, 6, 7, 8, 10 வகை வரை உளுந்தும், விஆா்ஐ-3 ரக எள் போன்ற புதிய ரக பயிா்களை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயிரிடுகின்றனா். இதன்மூலம் உற்பத்தி செலவை குறைத்து மும்மடங்கு மகசூலை பெற்று லாபம் அடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி உழவா் மன்ற விவசாயிகளுடன் கோவை வேளாண்மை பல்கலைக்கழக இயக்குநா் (திட்டமிடல் மற்றும் மேற்பாா்வை) வெங்கடபிரபு கலந்துரையாடினாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீராம், பேராசிரியா்கள் மருதாச்சலம், பாஸ்கரன், பாரதிமோகன், நடராஜன் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...