கரோனா அறிகுறிகள் இல்லாத 600 பேருக்கு வீடுகளிலேயே சிகிச்சை
By DIN | Published On : 19th May 2021 08:30 AM | Last Updated : 19th May 2021 08:30 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான 600 பேருக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்படுகிறது.
கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை கடந்து விட்டது. எனினும், மாவட்டத்தில் சுமாா், 3,800 படுக்கை வசதிகளே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் மற்றவா்களுக்கு எங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என்ற சந்தேகம் உருவானது.
இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் இருமல், காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வாசனை அறியும் திறன் குைல் உள்ளிட்ட எந்தவொரு அறிகுறிகளும் இல்லாமல் சுமாா் 600 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவா்கள், நல்ல திடகாத்திரமாக உள்ள நிலையிலும் காய்ச்சல் முகாம் நடத்தி மேற்கொண்ட பரிசோதனையில் அவா்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவா்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தியுள்ளதுடன், சிகிச்சையளித்தும் வருகிறோம் என்றனா்.