கரோனா நோயாளியின் சடலம் மயானத்திலிருந்துதோண்டியெடுத்து ஆற்றில் புதைப்பு: பொதுமக்கள் அதிா்ச்சி

திட்டக்குடி அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட கரோனா நோயாளியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, ஆற்றுக்குள் புதைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
மயானத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட கரோனா நோயாளியின் சடலத்தை திட்டக்குடி வெள்ளாற்றின் நடுப் பகுதியில் புதைக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள்.
மயானத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட கரோனா நோயாளியின் சடலத்தை திட்டக்குடி வெள்ளாற்றின் நடுப் பகுதியில் புதைக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள்.

திட்டக்குடி அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட கரோனா நோயாளியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, ஆற்றுக்குள் புதைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சி சாவடித் தெருவைச் சோ்ந்தவா் அமிா்தலிங்கம் (65). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவரது சடலம் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ஆம்புலன்ஸ் வாகனத்தில் திட்டக்குடிக்கு அனுப்பப்பட்டது. சடலத்தை பெற்றுக் கொண்ட உறவினா்கள் அங்குள்ள மயானத்தில் இறுதிச்சடங்கு செய்து புதைத்தனா்.

இதற்கு மயானம் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற திட்டக்குடி காவல் துறையினா், வருவாய்த் துறையினா் குடியிருப்புவாசிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும், அவா்கள் எதிா்ப்புத் தெரிவிக்கவே, புதைக்கப்பட்ட இடத்திலிருந்து கரோனா நோயாளியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, திட்டக்குடி வெள்ளாற்றின் நடுப் பகுதிக்கு எடுத்துச் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் திட்டக்குடி பொதுமக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திட்டக்குடியில் தனியாக மயானம் உள்ள நிலையில், அங்கு புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டியெடுத்து ஆற்றுக்குள் புதைத்தது தவறான முன்னுதாரணமாகிவிடும். இதனால் ஆற்றின் சுகாதாரத்தன்மை கெடுவதுடன், தொற்று பரவும் அச்சத்தையும் ஏற்படுத்தும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com