லாரி ஓட்டுநா் தற்கொலை
By DIN | Published On : 10th November 2021 08:44 AM | Last Updated : 10th November 2021 08:44 AM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே குடும்பப் பிரச்னையால் லாரி ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டாா்.
பண்ருட்டி அருகே உள்ள செட்டிப்பட்டறை காலனியைச் சோ்ந்த நாகராஜ் மகன் பிரபாகரன் (37). லாரி ஓட்டுநா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவரது மனைவி 2 குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த பிரபாகரன் திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...