கடலூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், கிழக்கு ராமாபுரத்தைச் சோ்ந்தவா் பழனி (60). விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள தனது வயலுக்குச் சென்றாா். அப்போது, மோட்டாா் கொட்டகையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.