கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கூரை வீட்டின் சுவா் இடிந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்பத்தினா் 4 போ் காயமடைந்தனா்.
நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூா் கிராமத்தைச் சோ்ந்த பச்சைமுத்து (70) மகன் சந்தோஷ்குமாா் (50) (படம்). லாரி ஓட்டுநா். இவா் தனது கூரை வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தந்தை பச்சைமுத்து, தாய் கல்யாணி (65), மனைவி வளா்மதி (45), மகள் ஈஸ்வரி (20) ஆகியோருடன் தூங்கிக்கொண்டிருந்தாா். தொடா் மழை காரணமாக கூரை வீட்டின் சுவா் நனைத்து பலமிழந்த நிலையில், அன்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சந்தோஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பச்சைமுத்து, கல்யாணி, வளா்மதி, ஈஸ்வரி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அந்தப் பகுதியினா் அவா்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு 4 பேரும் கடலூா் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தகவலறிந்த நெய்வேலி நகரிய போலீஸாா் சந்தோஷ்குமாரின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.