கடலூர் திமுக எம்.பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்: அக்.13 வரை நீதிமன்றக் காவல்

கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் தேடி வந்த நிலையில் கடலூர் திமுக எம்.பி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்.
திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்.

கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் தேடி வந்த நிலையில் கடலூர் திமுக எம்.பி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை செய்த கோவிந்தராசு என்ற பாமக நிர்வாகி கடந்த செப். 19ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரை எம்.பி.யும், அவரது ஆட்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டார்கள் என்று கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதற்கிடையில், கோவிந்தராசு மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, கூடுதல் துணை கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் சிபிசிஐடி போலீஸார் கடந்த செப். 28 ஆம் தேதி விசாரணையை துவக்கினார். திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்ட சிபிசிஐடியினரும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இவர்கள், காடாம்புலியூர் காவல் நிலையம், முந்திரி ஆலையில் விசாரணை நடத்தி சாட்சியங்களை சேகரித்ததோடு, வாக்குமூலங்களை பதிவு செய்தனர். இதனையடுத்து, அக்.9 ஆம் தேதி திமுக மக்களவை உறுப்பினர் எஸ்.ரமேஷ் உள்பட 6 பேர் மீது 302 (கொலை) உள்பட 6 பிரிவுகளின் கீழ் கடலூர் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில், முந்திரி தொழிற்சாலை ஊழியர்களான நடராஜன் (31),  கந்தவேல் (49), அல்லாபிச்சை (53), வினோத் (31), சுந்தரராஜன் (31), ஆகிய 5 பேரை விசாரணைக்காக வெள்ளிக்கிழமை இரவில் அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் 5 பேரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர். 

மக்களவை உறுப்பினர் தலைமறைவான நிலையில் அவரை கைது செய்யக்கோரி பாமகவினர் சிபிசிஐடி அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் எஸ்.ரமேஷ் எம்.பி ஆஜரானார். நீதித்துறை எண்.2 இல் ஆஜரானார். பொறுப்பு நீதிபதி கற்பகவள்ளி அவரை அக். 13 வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக மக்களவை உறுப்பினர் எஸ்.ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் எம்பியின் அறிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com