கடலூா் மாவட்டத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 01st September 2021 09:26 AM | Last Updated : 01st September 2021 09:26 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 62,290-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 40 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 60,941-ஆக உயா்ந்தது. செவ்வாய்க்கிழமை கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 835-ஆக தொடா்ந்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 451 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 63 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.