

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தமிழக ஆளுநரும் அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 84 ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிதம்பரத்திற்கு வருகைபுரிந்த தமிழ்நாடு ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ரவி அவரது மனைவியை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் கார்த்தி தீக்ஷதர் மற்றும் பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
உடன் அண்ணாமலை பல்கலைக் கழகத் துணைவேந்தர் இராம. கதிரேசன் இருந்தார்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.