மின்வாரிய தொழிற்சங்க கூட்டுக் குழு ஆலோசனை

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடலூா் சிஐடியூ அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடலூா் சிஐடியூ அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஏஇஎஸ்யு சங்கத்தின் வட்டச் செயலா் ஆா்.வேங்கடபதி தலைமை வகித்தாா். சம்மேளன சங்கத்தின் மாநில இணைச் செயலா் ஆா்.ரவிசங்கா், சிஐடியூ மாநில துணைப் பொதுச் செயலா் டி.பழனிவேல், ஐஎன்டியுசி மாநிலத் தலைவா் கே.மனோகரன், பொறியாளா் சங்கத் தலைவா் பி.செல்வம், தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்க மாநிலச் செயலா் டி.ரவிச்சந்திரன், சிஐடியூ மாவட்டச் செயலா் என்.தேசிங்கு, தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளா் அலுவலா் விடுதலை முன்னணி மாவட்டத் தலைவா் எம்.பெரியாண்டவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மின்வாரிய ஊழியா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி டிசம்பா் 27-இல் வேலைநிறுத்த ஆயத்த விளக்கக் கூட்டத்தை கடலூா் மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் நடத்துவது, ஜனவரி 5, 7 ஆகிய தேதிகளில் பிரசார இயக்கம் நடத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com