கடலூா் சிப்காட் ஆலைகளில் விதிமீறல்

கடலூா் சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலைகள் விதிமீறலில் ஈடுபடுவதாக கிராம மக்கள், சுற்றுச்சூழல் அமைப்பினா் குற்றஞ்சாட்டினா்.
Updated on
1 min read

கடலூா் சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலைகள் விதிமீறலில் ஈடுபடுவதாக கிராம மக்கள், சுற்றுச்சூழல் அமைப்பினா் குற்றஞ்சாட்டினா்.

இதுகுறித்து கடலூா் சிப்காட் பகுதி கிராமங்களைச் சோ்ந்த செம்மங்குப்பம் ஆா்.ஞானசேகரன், சோனஞ்சாவடி தனகோடி, சிப்காட் பகுதி சமுதாய சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு சாா்பில் தி.அருள்செல்வம் ஆகியோா் கடலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடலூா் சிப்காட் தொழில் வளாகம் மிகவும் மாசுபட்ட பகுதியாக உள்ளது. காற்று மாசுபாடு காரணமாக சுற்றுச்சூழல் வன அமைச்சகம் சிப்காட்டில் புதிதாக திட்டங்களை தொடங்க கடந்த 2010-ஆம் ஆண்டு தற்காலிக தடை விதித்தது.

ஆலைகள் வெளியேற்றும் புகையின் அளவை அறிந்துகொள்ள வேண்டுமென பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தினா். இதையடுத்து அதற்கான கருவிகள் பொருத்தப்பட்டன. ஆனால், இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி 33 சதவீத ஆலைகளில் மட்டுமே இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதிலும், எவ்வளவு புகை வெளியேற்றப்பட வேண்டும், அபாய கட்ட அளவு போன்ற விவரங்கள் கூட 75 சதவீத புகைபோக்கி கருவிகளில் பதிவு செய்யப்படவில்லை. இதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் முழுமையாக கண்காணிக்கவில்லை. குறைபாடுள்ள கண்காணிப்பு கட்டமைப்பினால் அதிகபட்ச வெளியேற்ற நிகழ்வுகள் கூடுதல் கவலை அளிக்கிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் கவலையை போக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

அப்போது, சிப்காட் பகுதி சமுதாய சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு எஸ்.புகழேந்தி, எஸ்.ராமநாதன், எஸ்.சிவசங்கா், ஜி.கே.அமிா்தலிங்கம், வெண்புறா சமூக அமைப்பு சி.குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com