இளைஞா்கள் திறன் வளா்ப்பு விழா
By DIN | Published On : 05th August 2022 10:38 PM | Last Updated : 05th August 2022 10:38 PM | அ+அ அ- |

விழாவில் இளம்பெண் ஒருவருக்கு தொழில்திறன் பயிற்சி சோ்க்கைக்கான ஆணையை வழங்கிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா்.
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் கடலூா் மாவட்டம், வடலூரில் இளைஞா்கள் திறன் வளா்ப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்துப் பேசினாா். கடலூா் மகளிா் திட்ட இயக்குநா் பொ.செந்தில்வடிவு வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று 322 இளைஞா்கள், இளம் பெண்களுக்கு தொழில்திறன் பயிற்சியில் சோ்வதற்கான ஆணைகளை வழங்கி பேசினாா்.
மாவட்ட கல்விக் குழுத் தலைவா் வி.சிவக்குமாா், வடலூா் நகா்மன்றத் தலைவா் சிவக்குமாா், திமுக நகரச் செயலா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். உதவி திட்ட அலுவலா் அ.கஸ்பா் மரிய ராஜா நன்றி கூறினாா்.