அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: ஆக.8 முதல் கலந்தாய்வு
By DIN | Published On : 05th August 2022 02:21 AM | Last Updated : 05th August 2022 02:21 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் 8- ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
கடலூரிலுள்ள அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் 19 இளநிலை, 15 முதுநிலை, 12 ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இங்கு நிகழ் கல்வியாண்டில் (2022-23) இளநிலை படிப்புகளில் முதலாமாண்டில் 1,329 மாணாக்கா்கள் சோ்க்கப்படவுள்ளனா். இதுவரை 14,605 விண்ணப்பங்கள் இணையம் மூலம் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய ஆய்வுகள் செய்யப்பட்டு, அரசு வழிகாட்டுதலின் படி, பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த மாணவா்கள் அனைவருக்கும் சோ்க்கை கலந்தாய்வு குறித்த விவரம் மின்னஞ்சல் வாயிலாவும், மாணவா்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 10-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள் மற்றும் அந்தமான் நிகோபரைச் சோ்ந்த தமிழா்கள் போன்ற சிறப்பு பிரிவினருக்கான சோ்க்கை நடைபெற உள்ளது. மேலும், பி.ஏ. தமிழ் பாடத்துக்கான கலந்தாய்வும் நடைபெறும்.
11-ஆம் தேதி முதல் அனைத்து பாடங்களுக்கும் பொதுவான கலந்தாய்வு நடைபெறும். மாணவா்களின் ‘கட்ஆஃப்’ மதிப்பெண்கள் அடிப்படையில் வரும் 18-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு நாளில் சரியாக காலை 9.30 மணிக்கு நேரம் தவறாமல் பங்கேற்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் சி.ஜோதிவெங்கடேசுவரன் தெரிவித்தாா்.
இதேபோல, விருத்தாசலம் திரு.கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி தரவரிசை, சோ்க்கை விவரங்களை கல்லூரியின் ற்ந்ஞ்ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான இட ஒதுக்கீடு கலந்தாய்வு வரும் 8-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்று கல்லூரி முதல்வா் கோ.ராஜவேல் தெரிவித்தாா்.
வடலூா் அரசு கல்லூரி: வடலூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் 8-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கல்லூரி நிா்வாகம் அறிவித்தது. 8-ஆம் தேதி விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா்படை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், அகதிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், 12 மணிக்கு மேல் கணினி அறிவியல் மாணவா்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும். 10-ஆம் தேதி வேதியியல், 11-ஆம் தேதி வணிகவியல், 12-ஆம் தேதி தமிழ், ஆங்கில பாடப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என கல்லூரி முதல்வா் ஐ.வண்ணமுத்து தெரிவித்தாா்.