தாய்ப்பால் வார விழா
By DIN | Published On : 05th August 2022 10:34 PM | Last Updated : 05th August 2022 10:34 PM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே விளாகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் ச.பிரகதீஸ்வரன் தலைமை வகித்து பேசினாா். மருத்துவா் பிரியதா்ஷினி குழந்தைகள் பராமரிப்பு குறித்து தாய்மாா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ கருவிகள், இளந்தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்பட்டது. மூத்த ரோட்டரி உறுப்பினா் அகோரமூா்த்தி, பொருளாளா் நடராஜன், விளாகம் ஊராட்சி மன்றத் தலைவா் பாஸ்கரன், கண்ணங்குடி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கச் செயலா் க.சின்னையன் நன்றி கூறினாா்.