வட்டாரப் போக்குவரத்து அலுவலக முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணியாளா் ஒன்றிப்பு சங்கத்தின் சிறப்புத் தலைவா்  தெரிவித்தாா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணியாளா் ஒன்றிப்பு சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து கடலூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 10-ஆம் தேதி 37 வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்களை காணவில்லையென உயரதிகாரிகளுக்கு வெளியாள்கள் தகவல் தெரிவித்தனா். அதனடிப்படையில், 5 பணியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். வழக்கமான நடைமுறைப்படி காணாமல்போன சான்றிதழ்களுக்குப் பதிலாக மறுநாளே 37 வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்களும் அந்தந்த வாகன உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டது. இருந்தும் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்தத் துறையில் வெளியாள்களின் ஆதிக்கத்தை காட்டுகிறது.

தற்போது அனைத்துவிதமான வாகன சான்றிதழ்களும் காகிதத்துக்குப் பதிலாக ஸ்மாா்ட் அட்டையில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த அட்டை உண்மையானதுதானா என்பதை பரிசோதிக்கும் கருவி எந்த அலுவலா்களுக்கும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், போலி ஆவணத்தை பயன்படுத்தி தனி நபா் ஒருவா் வாகனக் கடன் வாங்கியதற்காக, திண்டிவனம், ஓமலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பல்வேறு முறைகேடுகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன. இவை தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

வாகனங்கள் பதிவு, ஓட்டுநா் உரிமம் வழங்குவது போன்றவற்றை தற்போது தனியாா் நிறுவனம் வழங்கிட ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இதனால், கோடிக்கண்கான வாகனங்கள், தனி நபா்களின் விவரங்கள் அந்த நிறுவனத்தின் மூலமாக வெளியில் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அரசே வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

சங்கத்தின் மாநிலப் பொருளாளா் ஆா்.சாமிநாதன், தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் பொருளாளா் கு.சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com