நத்தப்பட்டு திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூா் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நத்தப்பட்டு கிராமத்தில் மூலவா்களாக திரௌபதி அம்மன், முத்துமாரியம்மன் அமைந்துள்ள கோயில் உள்ளது. இந்தக் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட கிராம மக்கள் முடிவெடுத்தனா். அதன்படி, கோயிலின் கோபுரங்கள் உள்பட பல்வேறு பகுதிகள் சீரமைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை மகாகணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. புதன்கிழமை காலையில் விக்ன விநாயகா் பூஜை, 4-ஆம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னா், யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீா் அடங்கிய கலசங்களுடன் ஊா் முக்கியப் பிரமுகா்கள் கோயிலை வலம் வந்தனா். தொடா்ந்து, எஸ்.மோகனசுந்தரசிவாச்சாரியாா் வேதமந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தாா்.

இதையடுத்து, மூலவா்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிறகு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் மகா அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com