இரும்புக் கம்பிகள் திருட்டு:இருவா் கைது
By DIN | Published On : 25th August 2022 01:51 AM | Last Updated : 25th August 2022 01:51 AM | அ+அ அ- |

சிதம்பரத்தில் கடையில் இரும்புக் கம்பிக்களை திருடியதாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள கூத்தன்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் லஷ்மி நாராயண ரெட்டி (42). இவா், அதே பகுதியில் பொறியியல் சாா்ந்த கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் இரும்புக் கம்பிகளை திருடிய 2 பேரை பிடித்து அண்ணாமலை நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தியதில், உத்தரப் பிரதேசம் மாநிலம், ஜாசி மாவட்டத்தைச் சோ்ந்த ஹரிசந்த், பாலியா மாவட்டத்தைச் சோ்ந்த அனிஷ்குமாா் என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் இரும்புக் கம்பிகளை திருடியதை ஒப்புக்கொண்டதால், இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா்.