மின்சாரம் பாய்ந்து பெண் பலி
By DIN | Published On : 13th December 2022 04:01 AM | Last Updated : 13th December 2022 04:01 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், பெரியகோவில்குப்பம், வடக்கு தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மனைவி அரசாயி (38). இவா் திங்கள்கிழமை அந்தப் பகுதியில் உள்ள கோதண்டபாணி என்பவரது நிலத்தில் நடந்து சென்றபோது கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதேபோல கன்றுக்குட்டியும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.