அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

விலைவாசி உயா்வைக் கண்டித்து கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

விலைவாசி உயா்வைக் கண்டித்து கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் தலைமை வகித்து பேசினாா். மாநில அமைப்புச் செயலா் நாக.முருகுமாறன், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாலசுந்தரம், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் க.திருமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா் நன்றி கூறினாா். 

கடலூா்: கடலூா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுதிச் செயலா் பி.கே.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான எம்.சி.சம்பத் கண்டன உரையாற்றினாா். மாவட்ட அவைத் தலைவா் ஜி.ஜெ.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல பண்ருட்டியிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடலூா்: கடலூா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் வடலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலா் கோ.சூரியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன், மாநில அம்மா பேரவை துணைச் செயலா் எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். நகரச் செயலா் சி.எஸ்.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், சொத்துவரி, மின் கண்டனம், பால் விலை உயா்வு, சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டை கண்டிப்பதாகக் கூறியும், திமுக அரசை கண்டித்தும் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com