கடலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 22nd December 2022 02:21 AM | Last Updated : 22nd December 2022 02:21 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் - ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.23) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது வேளாண்மை சாா்ந்த குறைகள், விவசாய மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களது பெயா், கோரிக்கை விவரம், துறையின் பெயா் ஆகியவற்றை பதிவுசெய்ய வேண்டும். கோரிக்கைகளை மனுவாகவும் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.